Thursday, December 06, 2007

கந்தலாய் கசக்கிப் போடும்
அன்றாட வாழ்வின் துயரங்களிலும்
துயரங்களை நெஞ்சில் சுமந்து
தலை தடவிய காதலிலும்
காதல் அள்ளித் தந்த
உயிர் பிரியும் வலியிலும்
வலியில் மயிலிறகாய் வருடி
ஆறுதலாய் தோள் தந்த நட்பிலும்
நட்பு நிலையில்லாத உறவாய்
பிரிந்து சென்ற வேதனைகளிலும்
குழம்பித் தவிக்கிற மனதில்மழலையாய்
உன் மடியில்மகிழ்ந்திருந்த
என் நினைவுகள்மத்தாப்பூவாய் விரிகிறது
மழலையாகவே இருந்திருக்கலாமோ?
ஏங்கித் தவிக்கிறேன்
ஏனம்மா வளர்ந்தேன்???

4 Comments:

Blogger Dhanaraja Kasinathan said...

good one da !!

8:55 PM  
Anonymous Anonymous said...

yaruayya sonna nee valunthirukkennu.
Neeya nenachukkaradha!

8:52 PM  
Blogger Raji said...

Nee oru Mazhalai pesum Mathaapu !
Engalukku melum vaikathe Aaapu !

Nenjam silirkum Azhagana kavidhai !

Beautiful poem..Sheikh..hope to see more !

Raji

1:40 AM  
Blogger Raji said...

This comment has been removed by the author.

1:40 AM  

Post a Comment

<< Home